தமிழர் சமையலில் முக்கிய இடம்பெறும் வடகம், நீண்டகாலம் வைத்துப் பயன்படுத்தக் கூடியவை. அடுத்து மழைக்காலம் தொடங்கும் நிலையில் இப்போதே இந்தக் குழம்பு வடகம் செய்து வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் பயன்படுத்தி ருசிக்கலாம்.
என்ன தேவை?
தட்டைப்பயறு – 400 கிராம்
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 10
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுத்தம்பருப்பு, தட்டைப்பயறை ஊற வைத்து, அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி பாலித்தீன் பேப்பரில் வைத்து, வெயிலில் நன்றாகக் காய வைத்து எடுக்கவும். இதை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
டிஜிட்டல் திண்ணை: செப்டம்பர் 20 வெள்ளி… உதயநிதி உயர்வுக்கு தேதி குறித்த பின்னணி!