கிச்சன் கீர்த்தனா : ஜவ்வரிசி கிச்சடி

Published On:

| By christopher

Javanese Khichdi

உப்புமாவை விரும்பாதவர்களும் கிச்சடியை விரும்புவார்கள். அந்தவகையில் ரவை கிச்சடி, சேமியா கிச்சடி என்பதை தவிர்த்து, இந்த ஜவ்வரிசி கிச்சடி செய்து கொடுங்கள்… அதிகம் விரும்புவார்கள்.

என்ன தேவை?

ஜவ்வரிசி – ஒரு கப்
உருளைக்கிழங்கு – ஒன்று (தோலுரித்து, வேகவைத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்)
சீரகம் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை – அரை கப்
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியைச் சிறிது தண்ணீர்விட்டு கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். மீண்டும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதனை ஆறு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து ஜவ்வரிசியை உதிர் உதிராக எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதில் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு, உப்பு, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அடங்கப்பா இது உலக மகா உருட்டுடா… அப்டேட் குமாரு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்… 65% வாக்குப்பதிவு!

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் : பட்டியலிட்ட மா.சுப்பிரமணியன்

வேலைவாய்ப்பு: TNIDB-ல் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share