விடுமுறை நாட்களில் மதிய உணவுக்கு பதில் வேறு ஏதாவது சாப்பிடலாமே என்று நினைப்பவர்கள் அனைவர் வீட்டிலும் உண்டு. அவர்களுக்கு இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷலாக இந்த தவா புலாவ் செய்து அசத்தலாம். kitchen keerthana dhava pulav mar 22
என்ன தேவை? kitchen keerthana dhava pulav mar 22
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
எண்ணெய்/வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி – ஒரு கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
இஞ்சிபூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நீளமாக கீறிய பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய தக்காளி – 2
சிறிய குடமிளகாய் – 1
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா – ஒன்றரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் அரிசியைச் சேர்த்து ஒன்றேகால் டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில் வந்ததும் (ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கிக் கொள்ளவும்) இறக்கி, ஆற விடவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெண்ணெய் விட்டு அதில் சீரகம், பெருங்காயம், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். தீயை மிதமாக்கி இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய வதக்கவும். இதில் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். குடமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், பாவ் பாஜி மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இதில் வெந்த அரிசியைச் சேர்த்து, அடுப்பை அணைத்து சாதம் உடைந்துவிடாமல் கிளறி இறக்கிப் பரிமாறவும்.