கிச்சன் கீர்த்தனா: வெள்ளரி புதினா கூல் சூப்

Published On:

| By Selvam

மழை மற்றும் குளிர்காலங்களில் நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் குளிர்ச்சியாக இருந்தாலும், நம் உடலையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரி மற்றும் புதிய புதினா இலைகளைப் பயன்படுத்தி புத்துணர்ச்சியூட்டும் இந்த கூல் சூப்பை அருந்தலாம்.

என்ன தேவை?

பெரிய வெள்ளரி – ஒன்று
பூண்டு – 2 பல்
புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
தயிர் அல்லது யோகர்ட் – ஒரு கப்
தண்ணீர் – கால் கப்
எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்)
பச்சை மிளகாய் – பாதியளவு
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

வெள்ளரியின் மேல் தோலைச் சீவி, சிறிதாக நறுக்கி பூண்டு, புதினா, தயிர், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து அதில் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஃபிரிட்ஜில் வைத்து, சாப்பிடும்போது எடுத்து ஒரு கிண்ணத்திலிட்டு மேலே புதினாவை வைத்து ஓரத்தில் எலுமிச்சைத்துண்டை வைக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘அமரன்’ குழுவுக்கு 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாணவர்!

எல்.ஐ.சி கம்பனிக்கே பாலிசி… : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share