கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்யக்கூடியது நீர்ச்சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காய். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த வெள்ளரி சாப்ஸ் செய்து ருசிக்கலாம். சட்டென்று, சுலபமாகச் செய்யக்கூடிய இதை மதிய உணவு நேரத்தில் சாதத்துக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.
என்ன தேவை?
வெள்ளரிக்காய் – கால் கிலோ (தோல் சீவி, வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
மாங்காய்த்தூள் (ஆம்சூர் பொடி) – அரை டீஸ்பூன்
சிறிய பச்சை மிளகாய் – 2
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
நெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், சர்க்கரை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு வெள்ளரி துண்டுகளைச் சேர்த்து வதக்கி… மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரண்டு நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பன்னீர் ‘பழக்க’ தோஷம்: அப்டேட் குமாரு
பார்ட் டைம் அரசியல்வாதி… நாதஸ் திருந்திட்டான் காமெடிதான்… : மோடி – எடப்பாடியை தாக்கிய ஸ்டாலின்
கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது : எடப்பாடி பழனிசாமி