கிச்சன் கீர்த்தனா : நண்டு மசாலா

Published On:

| By christopher

kitchen keerthana crab masala

திடீர் விருந்தினர்கள்… என்ன செய்வது என்று யோசிப்பவர்கள் நம்மில் பலருண்டு. வந்திருக்கும் விருந்தினர்கள் அசைவ பிரியர்கள் என்றால் இன்னும் கூடுதலாக யோசிப்போம். இப்படிப்பட்ட நிலையில் இந்த நண்டு மசாலா செய்து அசத்தலாம். kitchen keerthana crab masala

என்ன தேவை?

நண்டு – ஒரு கிலோ
கடலை எண்ணெய் – 100 மில்லி
சோம்பு – 2 கிராம்
பட்டை – 2 கிராம்
கிராம்பு – ஒரு கிராம்
அன்னாசிப்பூ – 2 கிராம்
ஏலக்காய் – ஒரு கிராம்
பிரிஞ்சி இலை – ஒரு கிராம்
வெந்தயம் – 3 கிராம்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 50 கிராம்
கறிவேப்பிலை – 2 கிராம்
பூண்டு விழுது – 40 கிராம்
இஞ்சி விழுது – 20 கிராம்
மஞ்சள்தூள் – 3 கிராம்
தக்காளி – 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 25 கிராம்
மிளகாய்த்தூள் – 60 கிராம்
எலுமிச்சைச் சாறு – ஒரு பழம்
மிளகு மற்றும் சீரகத்தூள் – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய் மசாலா – 100 கிராம்

தேங்காய் மசாலா செய்ய..

தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
முந்திரி – 20 கிராம்
கசகசா – 10 கிராம்
இவற்றை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும்.

நண்டு மசாலா தயாரிக்க…

சோம்பு – 4
ஏலக்காய் – ஒன்று
சீரகம் – 3 சிட்டிகை
மிளகு – 5 கிராம்
பட்டை – ஒரு துண்டு
இவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.

எப்படிச் செய்வது?

வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நண்டு மசாலா சேர்த்து நன்கு வதக்கிய பின், தேங்காய் மசாலா சேர்க்கவும். கலவை சற்று வதங்கியவுடன் நன்கு சுத்தம் செய்த நண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகு மற்றும் சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நண்டு வெந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share