கிச்சன் கீர்த்தனா : கார்ன் கபாப்

Published On:

| By christopher

Kitchen Keerthana: Corn Kebab

சோளத்தை சுட்டுச் சாப்பிட்டிருப்போம், வேகவைத்துச் சாப்பிட்டிருப்போம். ரெஸ்டாரன்ட்டுகளில் கிடைக்கிற மாதிரி சோள உணவுகளை வீட்டிலேயே செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கு பதில் சொல்லும்விதமாக அமையும் இந்த கபாப். இந்த வார வீக் எண்டை கார்ன் கபாப்புடன் ஸ்பெஷலாக்குங்களேன்.

என்ன தேவை?
வேகவைத்து, உதிர்த்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துகள் – ஒரு கப்
துருவிய காலிஃப்ளவர் – ஒரு கப்
வேர்க்கடலைப்பொடி – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 6
புதினா தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – கால் கப்
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
ரஸ்க் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
ரெட் சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, கார்ன் போட்டு, புதினா, ரெட் சில்லி சாஸ் சேர்த்து வேர்க்கடலைப்பொடி தூவிப் புரட்டி கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை போல தட்டி, விருப்ப வடிவ பிஸ்கட் கட்டரால் அழுத்தி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஒரு பானில் (Pan) கொஞ்சம் எண்ணெய்விட்டு சூடாக்கி, இந்த கார்ன் கபாபை அதில் போட்டு இருபுறமும் வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுத்து, அதன் ஒவ்வொன்றின் மேலும் முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரித்து சாஸ் உடன் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: மத்தவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கள்ளக்குறிச்சி செல்வதற்கு முன்… ஸ்டாலின் செய்யும் ‘சட்ட’மன்ற சம்பவம்!

இதுக்கே இந்த கெடுபிடியா: அப்டேட் குமாரு

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share