கிச்சன் கீர்த்தனா : கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ்

Published On:

| By christopher

உலகம் முழுவதும் பெரும் வரவேற்புடைய காய்கறிகளில் ஒன்று குடமிளகாய். இந்தியாவில் வட இந்திய, தென்னிந்திய சமையல் முறைகளிலும் பயன்படுத்தப்படும் குடமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துகள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குட மிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். அதற்கு இந்த கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?
மஞ்சள் குடமிளகாய் – பாதி (நறுக்கியது)
பச்சை குடமிளகாய் – பாதி (நறுக்கியது)
வெள்ளரிக்காய் – பாதி (தோல் சீவி நறுக்கியது)
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
கேரட் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – பாதி (பொடியாக நறுக்கியது)
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது? :
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய குட மிளகாய்கள், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அதனுடன் உப்பு, தயிர் கலந்து பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share