கிச்சன் கீர்த்தனா: மோர் ஆப்பம்

Published On:

| By Selvam

இட்லி, இடியாப்பம் போல எளிதாக ஜீரணிக்கக் கூடிய நம்முடைய உணவு வகைகளில் ஆப்பத்துக்கும்  முக்கிய இடமுண்டு. காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற சரியான உணவு ஆப்பம். தற்போது, ஆப்பத்தில் பல வெரைட்டிகளைக் காட்டி அசத்தும் ஹோட்டல் பல உண்டு. நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்த மோர் அப்பம் செய்து இந்த வீக் எண்டை கொண்டாடுங்கள்.

என்ன தேவை?

பச்சரிசி – 4 ஆழாக்கு
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை – தலா 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
நன்கு புளித்த மோர், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?  

அரிசியை 4 – 5 மணி நேரம் ஊறவைத்து மோர் சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). அதனுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் தாளித்து… மாவில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசை போல வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, மூடி போட்டு மூடி வைத்து, வெந்ததும் எடுக்கவும் (திருப்பிப் போட தேவை இல்லை). மாவை அரைத்த உடனேயே வார்க்கலாம். தக்காளி சட்னி இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: ராகுல்காந்தி வேதனை!

சென்னை உயர் நீதிமன்றம் : 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share