பத்து நாட்களுக்கு முன்புவரை ‘அடிக்குது மழை’ என ஒதுங்கிக் கொண்டிருந்தோம். இப்போது சுளீர் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. வெயிலுக்கு இதமாகவும், அதே நேரம் வயிற்றுக்கு குளுமையாகவும் இந்த நாளை வித்தியாசப்படுத்த பட்டர் ஃப்ரூட் சாக்கோ செய்து சுவைக்கலாம்.
என்ன தேவை?
நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகாடோ) – 2
கெட்டியான பாதாம் மில்க் – அரை கப்
கோகோ பவுடர் – அரை கப்
துருவிய டார்க் சாக்லேட் – கால் கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
அலங்கரிக்க…
சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வேஃபல், ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது? :
அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும். குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெய்லர் அக்காவா? என்னடா நடக்குது இங்க… அப்டேட் குமாரு
விவசாயத்தில் நவீனம்: தமிழகத்தில் சிங்கப்பூர் அரசு செய்யப் போகும் அசத்தல் திட்டம்!