வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை அன்று காலை நேரத்தில் பலருக்கு உதவுவது பிரெட். இந்த பிரெட்டை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக பிரெட் மஞ்சூரியன் செய்து காலை சிற்றுண்டியாகச் சுவைக்கலாம். மதிய நேர உணவாகவும் பயன்படுத்தலாம். மாலை சிற்றுண்டிக்கும் ஏற்றது.
என்ன தேவை?
கோதுமை பிரெட் – 4 ஸ்லைஸ்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், குடமிளகாய் – தலா ஒரு கைப்பிடி அளவு
கடலை மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
பிரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு, சதுரமாக வெட்டி, வெண்ணெயில் பொரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… காய்கள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் வதங்கியதும், பொரித்த பிரெட், உப்பு, கடலை மாவு சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எப்படி தான் டிசைன் டிசைனா யோசிப்பாங்களோ? – அப்டேட் குமாரு
திமுக பவள விழா… வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அறிவாலயம்!