வளரும் குழந்தைகளுக்கு வாய்க்கு ருசியாக, வயிற்றுக்கு நிறைவாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் அவசியம். அப்படிப்பட்ட உணவுதான் இந்த முளைப்பயறு சாதம். புரதச்சத்து அதிகம் உள்ள இந்த சாதம் லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்றதும்கூட. kitchen keerthana beans rice
என்ன தேவை?
அரிசி – 250 கிராம்
முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப்பயறு, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய காராமணி – தலா ஒரு சிறிய கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பூண்டுப் பல் – 10
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியைக் களைந்து, ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். எல்லா பயறு வகைகளையும் ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பயறு வகைகளை தண்ணீர் வடித்துவிட்டு, சாதத்துடன் கலக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டுப் பற்களை எண்ணெய் விட்டு வதக்கி, பயறு சாத கலவையைப் போட்டு நன்கு கலந்து, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும்.
