பார்லி என்றாலே அது நோயாளிகளுக்கான உணவு என்றுதான் பலரும் நினைக்கிறோம். ஆனால், இது எடை இழப்புக்கு உதவும், குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட உணவாகும். பார்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு அற்புத துணைபுரியும். அப்படிப்பட்ட பார்லியில் சுவையான உப்புமா செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும். Kitchen keerthana barley uppuma
என்ன தேவை? Kitchen keerthana barley uppuma
பார்லி – 100 கிராம்
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று
தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது? Kitchen keerthana barley uppuma
பார்லியை குழையாமல் வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த பார்லி சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எலுமிச்சைச் சாறும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.