கிச்சன் கீர்த்தனா : வாழைத்தண்டு ஸ்நாக்ஸ்

Published On:

| By christopher

kitchen keerthana : Bananastem Snacks

நார்ச்சத்துள்ள வாழைத்தண்டின் பொரியல், கூட்டு, பச்சடி என்று செய்பவர்கள் இந்த ஸ்நாக்ஸும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள இந்த ஸ்நாக்ஸை அனைத்து வயதினரும் எவ்வித குற்ற உணர்ச்சியின்றியும் சாப்பிடலாம். மாலை நேரத்துக்கேற்ற சூப்பர் ஸ்நாக்ஸாகவும் இது அமையும்.

என்ன தேவை?
வாழைத்தண்டு – ஒன்று
கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் – கால் டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு துண்டு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?
வாழைத்தண்டைச் சுத்தம் செய்து சின்னச் சின்னத் துண்டாக வெட்டி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் எள், ஓமம், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்னர் அதனுடன் தயாரித்துவைத்துள்ள வாழைத்தண்டு சாறு சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். பின்னர் இதனை கத்தி கொண்டு கோடுகள் போட்டு உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். பின்னர் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். டேஸ்ட்டி வாழைத்தண்டு ஸ்நாக்ஸ் ரெடி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

ஷாக் அடிக்குது… ஷாக் அடிக்குது: அப்டேட் குமாரு

திருவாரூர்: பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… மா.செ மீது வழக்கு!

ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: பங்குச்சந்தை கடும் சரிவு… மோடி ஷாக்! ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share