அனைத்து பணிகளையும் முடித்துக்கொண்டு மாலை நேரத்தில் வீட்டுக்குள் நுழைபவர்கள் ‘ஏதாவது இருந்தா கொடேன்’ என்பவர்கள். அவர்களுக்கு சூடான இந்த அவல் கிரிஸ்பியைச் செய்து கொடுத்து பசியாற்றலாம். பள்ளிக்குச் சென்றுவிட்டு திரும்பும் குழந்தைகளுக்கேற்ற சத்தான உணவாகவும் இது அமையும். kitchen keerthana : aval krispi
என்ன தேவை?
ரவை மாதிரி பொடித்த அவல் – 5 டீஸ்பூன்
கொரகொரப்பாக உடைத்த வேர்க்கடலை – கால் கப்
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோலுரிக்கவும்)
உப்பு, மிளகாய்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை
சாட் மசாலாத்தூள் (அலங்கரிக்க) – சிறிதளவு
பொரிப்பதற்கு…
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு மசிக்கவும். இதனுடன் பொடித்த அவல், மசாலாத் தூள்கள், உப்பு, பொடித்த வேர்க்கடலை சேர்த்து நன்கு பிசையவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, எலுமிச்சை அளவு கலவையை எடுத்து உருட்டி விருப்பமான வடிவத்தில் செய்யவும். சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, எண்ணெயை வடிக்கவும். மேலே சாட் மசாலா தூவி, சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.