சமைத்த உணவு மீந்துவிட்டால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து சில நாள்கள் வரை பயன்படுத்துகிறோம். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்கலாம். ஆனால், அது கெட்டுப் போயிருக்கலாம்.
உதாரணத்துக்கு, உருளைக்கிழங்கு பொரியல் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அவற்றில் உருவாகும் நுண்ணுயிர்கள், சூடுபடுத்தினாலும் அழியாது. ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை சரியான வெப்பநிலையில் சூடுபடுத்தி உண்ண வேண்டிய அவசியமும் உள்ளது.
ஃப்ரிட்ஜில் வைத்த உணவை முறைப்படி சூடாக்காவிட்டால், ஃபுட் பாய்சனிங் ஏற்படலாம். அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம். இதைத் தவிர்க்க உணவுகளை ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.
தவிர்க்க முடியாமல் ஃப்ரிட்ஜில் சேமித்தாலும் உடனுக்குடன் பயன்படுத்தி விட வேண்டும். ஃப்ரிட்ஜில் இருந்து உணவை எடுத்த பின்னர் அதை அறை வெப்பநிலைக்கு (Thawing) கொண்டுவந்த பிறகே சூடுபடுத்த வேண்டும்.
வெந்நீரில், சாதாரண நீரிலோ அந்த உணவை வைத்துவிட்டு பிறகு சூடுபடுத்தலாம். அதிக அளவிலான உணவுகளை சூடுபடுத்த வேண்டும் என்றால், சிறிது சிறிதாகப் பிரித்துச் சூடுபடுத்திப் பயன்படுத்த வேண்டும். ஆனால், சாப்பிடுவதற்கு சற்று நேரம் முன்பு சூடுபடுத்துவதே சரியானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது? – அப்டேட் குமாரு
தளபதி என என்னை முதலில் அறிவித்த திருச்சி சிவா… -புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பெருமிதம்!