திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரமும் சிறப்புப் பேருந்துகளும்!

Published On:

| By Minnambalam

ஆவணி மாதத்துக்கான பௌர்ணமி ஆகஸ்ட் 30ஆம் தேதி (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி திருவண்ணாமலைக்கு 350 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பெளர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆவணி மாதத்துக்கான பௌர்ணமி ஆகஸ்ட் 30ஆம் தேதி (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 30ஆம் தேதி காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் பெளர்ணமியையொட்டி வருகிற 30ஆம் தேதி சென்னையில் இருந்து 250 பேருந்துகளும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50  பேருந்துகளும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் 50  பேருந்துகளும் என 350 சிறப்புப்  பேருந்துகள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

ராஜ்

எஸ்.ஐ தேர்வில் ‘பிட்’ அடித்த போலீஸ்காரரின் மனைவி!

உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

நிலவுப் பரப்பு ஆய்வும், காலை உணவுத் திட்டமும்: வரலாற்று சாதனை என்பது என்ன?

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share