தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
கிணத்துக்கடவு வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கிணத்துகடவு 1967, 1971, 1989 1996 ஆகிய 4 தேர்தல்கள் தவிர அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வென்ற தொகுதி.
திமுகவில மூத்த தலைவர் கண்ணப்பன் 1967, 1971-ல் ஜெயிச்ச தொகுதி.
2001 முதல் 2021 வரை முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் 4 முறை ஜெயிச்சிருக்காரு.
போன தேர்தலில் திமுகவின் குறிச்சி பிரபாகரனை அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் 1,095 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிச்சிருந்தாரு.
இந்த முறை திமுக வேட்பாளராக கேவிகேஎஸ் சபரி கார்த்திகேயன் களம் காண்கிறார். இவரது தாத்தா நெகமம் கந்தசாமி என்கிற கே.வி. கந்தசாமி. அதிமுகவில 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் சீனியரான முன்னாள் அமைச்சர் தாமோதரனே மீண்டும் போட்டியிடுகிறார்.
இங்கே கள நிலவரமானது, இம்முறை திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது.
நமது சர்வே முடிவுபடி,
திமுக –39 %
அதிமுக –35%
தவெக- 19%
நாதக-5% வாக்குகள் பெறும்
திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்









