தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
கிள்ளியூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸும், அந்த கட்சியில் இருந்து பிரிந்த தமிழ் மாநில காங்கிரஸும் மோதுகின்றன. கடந்த முறை காங்கிரஸின் ராஜேஸ்குமார் வெற்றி பெற்றார். இவர், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
இந்தமுறையும் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேஸ்குமார் களம் காண்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக நிவின் சைமன் களமிறங்குகிறார்.
இந்த தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா தொட்டுவிட முடியாத அளவுக்கு காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாக கள நிலவரம் கூறுகிறது.
இந்த தொகுதியில் கடந்த முறை 55,400 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமாகா வேட்பாளர் ஜூட் தேவை ராஜேஸ் குமார் தோற்கடித்தார்.
இந்த தேர்தலில் தவெக சார்பில் சபீர், நாதக சார்பில் ஹிம்லர் ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி -42%
அதிமுக கூட்டணி -30%
தவெக -20%
நாதக-5% வாக்குகள் பெறும்.
கிள்ளியூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஸ்குமார் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்










