கிச்சன் கீர்த்தனா : பட்டர் கார்ன் பாஸ்தா

Published On:

| By christopher

kichen keerthana butter corn pasta march 19

குழந்தைகளின் விருப்பமான உணவான பாஸ்தாவை சுவையாகவும் ஹெல்த்தியாகவும்
செய்ய இந்த ரெசிப்பி உதவும். பாஸ்தாவை விரும்பாதவர்களும் இந்த பாஸ்தாவைச்
செய்து முடித்ததும், ‘எனக்கும் கொஞ்சம் கொடேன்… டேஸ்ட் பார்க்கிறேன்’
என்று விரும்பிக் கேட்பார்கள். kichen keerthana butter corn pasta march 19

என்ன தேவை?

ஸ்பெகட்டி (இத்தாலியன் பாஸ்தா) – 100 கிராம்
வெண்ணெய்  – ஒரு டேபிள்ஸ்பூன்
சீஸ் ஸ்பிரெட்  – ஒரு டேபிள்ஸ்பூன் (சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்)
வேகவைத்த கார்ன் – அரை கப்
பால் – கால் கப்
நசுக்கிய மிளகு  – கால் டீஸ்பூன்
உப்பு  – தேவையான அளவு
ஆலிவ் ஆயில்  – சிறிதளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து ஸ்பெகட்டியைத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்
கொதிக்க விடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்து சிறிது ஆலிவ் ஆயிலை அதில்
ஊற்றிக் கலக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், தீயை
மிதமாக்கி வெண்ணெய் விட்டு இதில் வெந்த கார்ன், வெந்த ஸ்பெகட்டி, சீஸ்
ஸ்பிரெட் சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். இதில் பால், உப்பு, நசுக்கிய
மிளகு சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share