நடிகர் சுதீப் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘மேக்ஸ்’ படத்தின் டைட்டில் டீசரை இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சுதீப் நடித்த ‘ஈகா’ திரைப்படம் இந்திய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கிச்சா சுதீப் தற்போது கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ‘மேக்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கிச்சா சுதீப் இன்று தனது 50 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு மேக்ஸ் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/theVcreations/status/1697679148892958910?s=20
தாணு அவருடைய எக்ஸ் பக்கத்தில், “இந்த நாளை எங்களது பாட்ஷாவிற்கு மேலும் சிறப்பானதாக மாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கிச்சா சுதீப் மற்றும் உங்கள் அனைவருக்கும் பிறந்தநாள் விருந்து இதோ.
அரக்கனுக்கு இப்போது மேக்ஸ் என்று பெயர்” என்று குறிப்பிட்டு டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தாணு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவைக் கோட் செய்து நடிகர் கிச்சா சுதீப் நன்றி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/KicchaSudeep/status/1697697813159985302?s=20
அதுமட்டுமின்றி சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சேரன் இயக்கும் படத்தில் கிச்சா சுதீப் நடிக்க உள்ளதாகவும், சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மோனிஷா