விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 28) இந்த அறிவிப்பு வெளியானவுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உதயநிதி வாழ்த்துப் பெற்றார்.
தொடர்ந்து இன்று (செப்டம்பர் 29) காலை சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு. பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேவேளையில், என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பெரியார் திடலுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தொடர்ந்து மறைந்த திமுக பேராசிரியர் அன்பழகன் இல்லம் மற்றும் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவர்களது திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அகிலேஷ் யாதவ் முதல் தனுஷ் வரை : உதயநிதிக்கு குவியும் வாழ்த்து!
செந்தில்பாலாஜி அமைச்சரானால் சாட்சிகளை கலைக்க மாட்டாரா?- ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!