குஷ்பு, மீனா, கே.டி. ராகவன், விஜயதாரணி.. தமிழக பாஜக புதிய மாநில நிர்வாகிகள் யார்?

Published On:

| By Minnambalam Desk

Tamil Nadu BJP

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. Khushbu Meena BJP
தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு முடிந்த நிலையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கையோடு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் டெல்லி விரைந்தனர்.

ADVERTISEMENT

தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநில பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்கிற பட்டியலை டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரன் கொடுத்துள்ளாராம்.

இது பற்றி பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, தமிழக பாஜகவில் இதுவரை ‘கோட்டா’ சிஸ்டம் அமலில் இருந்தது. இந்த சீனியர் தலைவருக்கு இத்தனை பதவிகள் என்பதுதான் அந்த கோட்டா சிஸ்டம். ஆனால் இப்போது ‘நயினார் சிஸ்டம்’ அறிமுகமாகிறது. பாஜகவில் கட்சிக்காக உழைத்தவர்கள், கொள்கையை பேசுகிறவர்கள், கோஷ்டிகள் மூலமாக பிரச்சனையை உருவாக்காதவர்கள் என அடையாளம் காணப்பட்டு டெல்லியில் இந்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது என நம்புவதாக கூறுகின்றனர்.

ADVERTISEMENT

தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலில் நடிகைகள் குஷ்பு, நமீதா, கேடி ராகவன், காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய விஜயதாரணி உள்ளிட்டோருக்கும் நிச்சயம் பதவி கிடைக்கும் என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.

அத்துடன், டெல்லியில் அடிக்கடி முகாமிட்டு பரபரப்புகளை கிளப்பும் நடிகை மீனாவுக்கும் தமிழக பாஜகவில் பதவி கிடைத்தாலும் ஆச்சரியமில்லைதான் என்கின்றனர் கமலாலய நிர்வாகிகள்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share