ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்த கேஜிஎப் – 2

Published On:

| By admin

இந்தி, ஆங்கிலப்படங்கள் மட்டுமே அகில இந்திய அளவில் வசூலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையை தெலுங்கில் தயாராகி வெளியான பாகுபலி முறியடித்தது. கன்னடத்தில் தயாராகி வெளியான கேஜிஎப் திரைப்படம் அதனை தொடர்ந்தது. கொரோனா பொது முடக்கம் ஒட்டுமொத்த சினிமாவையும் முடக்கிப் போட்டது.

திரையுலகமும், திரையரங்க தொழிலும் இயல்புநிலைக்கு திரும்பிய பின்பு தென்னிந்தியாவில் தயாரான புஷ்பா, அகண்டா, ஆர்ஆர்ஆர் படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மார்ச் 25 அன்று வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் இந்தியில் 200 கோடியையும் உலக அளவில் 1000 கோடி வசூலையும் கடந்துள்ளது. எதிர்வருகின்றஏப்ரல் 14ம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடித்துள்ள ‘கேஜிஎப் சாப்டர் 2படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான முன்பதிவு இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக வட இந்திய வணிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களில் எந்தவொரு இந்தி, தெலுங்கு படங்களுக்கும் இது போன்று குறுகிய நேரத்தில் முன்பதிவு நடைபெற்றதில்லை. ஆர்ஆர்ஆர் படம் முன்பதிவில் படைத்த சாதனையை சில மணி நேரங்களிலேயே கேஜிஎப் சாப்டர் – 2 முறியடித்து இருக்கிறது.

இதுவரையில் ‘பாகுபலி 2’ படம் தான் முன்பதிவு டிக்கெட் விற்பனை மூலமாக 35 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடத்தில் இருந்தது இந்த சாதனையை ‘ஆர்ஆர்ஆர்’ படம் கூட சமன் செய்ய முடியாத நிலையில் கேஜிஎப் – 2 அதனை முறியடித்து முதலிடத்திற்கு வந்துள்ளது. அதற்கு இந்தி நட்சத்திரங்களான சஞ்சதய்தத்,நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் படத்தில் நடித்திருப்பது ஒரு காரணம் என கூறப்படுகிறது.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share