தெற்கு ஆசிய நாடுகளில் JN.1 என்ற கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. Kerala Sees Alarming Surge in COVID-19 Cases
இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 273 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:
கோட்டயம் 82
திருவனந்தபுரம் 73
எர்ணாகுளம் 49
பத்தினம்திட்டா 30
திருச்சூர் 26
இதர தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவிலும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
நாட்டின் தலைநகர் டெல்லியில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 9 மாத குழந்தை உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஆந்திராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இல்லாத நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.