முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. அதைக் கண்காணிக்க மூவர் குழுவையும் நியமித்தது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தமிழக அதிகாரிகள் நேற்று நுழைவுவாயில் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு கேரள அரசிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறிய கேரள அரசு அதிகாரிகள், நுழைவுவாயில் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக பேசிய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், நுழைவுவாயில் அமைப்பதற்கு கேரள அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.