கன்னியாஸ்திரி உடை; கழுத்தில் ஸ்டெதஸ்கோப்… பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகி வித்தியாசமான சாதனை படைத்துள்ளார் கன்னியாஸ்திரி ஒருவர்.

கேரள கத்தோலிக்க சிரிய மலபார் ஆலயத்தில் கன்னியாஸ்திரியாக பணியாற்றி வருபவர் டாக்டர். ஜீன் ஜோஸ். இவருக்கு ரோசம்மா தாமஸ் என்ற பெயரும் உண்டு. இவர் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு பெங்களுருவிலுள்ள புனித . ஜான் மருத்துவக் கல்லூரியில் அனஸ்தீஷியா பிரிவில் மேற்படிப்பும் படித்தவர்.

பின்னர், கன்னியாஸ்திரியாக மாறி விட்டார். இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியிலுள்ள கத்தோலிக்க சிரயன் மலபார் டயோசிஷன் நடத்தி வரும் மருத்துவமனையில் டாக்டராக இருந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பணியாற்றினார். அனுபவமிக்க ரோசம்மா தாமஸின் சேவை அரசு துறைக்கு தேவை என்று கேரள அரசு கருதியது.

இதையடுத்து, ரோஸம்மா மற்றும் ஆலய நிர்வாகிகளிடம் பேசிய அரசுதுறை அதிகாரிகள் அவரை 2 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக கட்டப்பணா மருத்துவமனையில் டாக்டராக நியமித்தனர். தற்போது, அவர் பதவி உயர்வு பெற்று மறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share