தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி!

Published On:

| By christopher

Kerala medical waste in Tamilnadu

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயரதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ஈரோட்டில் முதல்வர் கள ஆய்வு முதல் கியாவின் புதிய எஸ்யூவி அறிமுகம் வரை! 

கிச்சன் கீர்த்தனா : பீட்ரூட் சட்னி

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: கேட்டை!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: உத்தரம்!

மகா தீபம்: தடையை மீறி சென்று வழி தெரியாமல் தவித்த ஆந்திர பெண்: இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு!

கல்லூரி ஆசிரியர், வெற்றி மாறனின் ஆதர்சம்… நடிகர் கிஷோரின் அறியாத பக்கங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share