மேல் பெர்த் அறுந்து விழுந்து பயணி மரணம்!

Published On:

| By christopher

Kerala man dies in upper berth collapses

கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து புதுடெல்லிக்கு ரயிலில் பயணம் செய்த ஒருவர், மேலே இருந்த பெர்த் சரிந்து விழுந்ததில் கீழே விழுந்து இறந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஜூன் 16-ம் தேதி நடந்த நிலையில் 62 வயதான அலிகான் மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று  ஜூன் 26 அன்று உயிரிழந்துள்ளது ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலப்புரம் பொன்னானியைச் சேர்ந்த அலிகான், எல்ஐசி முகவராகப் பணிபுரிந்து வந்தவர். ஜூன் 15-ம் தேதி இரவு எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு வண்டியில் தனது நண்பர் முகமதுவுடன் ஏறியுள்ளார்.

ரயில் தெலுங்கானா வழியாகச் சென்றபோது மேலிருந்த பெர்த் பிரிந்து அலிகான் மீது விழுந்துள்ளது. உடனே சக பயணிகள் டிடிஇ-க்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து வாரங்கல் நிலையத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அலிகானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடுத்த நாள், அவர் ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கடந்த சனிக்கிழமை ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் பலனலளிக்காமல் ஜூன் 26 உயிரிழந்துள்ளர்.

இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர்,

“இறந்துள்ள பயணி S6 பெட்டியின் இருக்கை எண் 57 (லோயர் பெர்த்) இல் பயணம் செய்தார்.

மேலிருந்த பெர்த்தின் செயின் சரியாக பொருத்தப்படாததால்  பெர்த்தின் இருக்கை கீழே விழுந்தது.

பயணிகள் மேல் படுக்கையில் இருக்கையைச் சரியாக சங்கிலியால் பிணைக்காததால், இருக்கை கீழே விழுந்தது.

இருக்கை சேதமடைந்த நிலையில் இல்லை, அது கீழே விழவோ அல்லது நொறுங்கவோ/விழவோ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள ரயில்வே அறிக்கையில்,

“ராமகுண்டம் ஸ்டேஷனில் 18:34 மணிக்கு ஒரு செய்தி கிடைத்ததும், பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் உதவிக்கு ஏற்பாடு செய்து, ராமகுண்டத்தில் ரயிலை திட்டமிடாமல் நிறுத்தினார்.

பயணி பெட்டியிலிருந்து ஆம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  மேல் பெர்த் அறுந்து விழுந்து பயணி மரணமடைந்த சம்பவம்  ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: சத்து மாத்திரைகள் சாப்பிடுபவரா நீங்கள்?

டாப் 10 நியூஸ் : அதிமுக போராட்டம் முதல் இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டி வரை!

கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் சில்லி 65

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பானையை வைத்து ’கேம்’ ஆடிய பாமக- ஷாக்கில் திமுக.,விசிக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share