சபரிமலை பிரசாதம் எல்லோரும் தயாரிக்கலாம்! வாபஸ் வாங்கிய தேவசம் போர்டு!

Published On:

| By Prakash

சபரிமலை தேவசம் போர்டு இன்று (ஆகஸ்ட் 10) வெளியிட்டிருக்கும் விளம்பரத்தில் மலையாள பிராமணர்கள் மட்டும் பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை வாபஸ் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில் தலங்களில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானமும் ஒன்று. இந்த கோயிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனைத் தரிசித்து வருகின்றனர். அதுவும் ஐயப்பன் கோயிலில் தயாரித்து விற்கப்படும் உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் உள்ளிட்ட பிரசாதமும் மிகவும் புகழ்பெற்றவை.

இந்த நிலையில், இப்பிரசாதத்தை மலையாள பிராமணர்கள் மட்டுமே தயார் செய்ய வேண்டும் என, சபரிமலை ஐயப்பான் கோயில் தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

குறிப்பாக, அம்பேத்கர் கலாசார மன்றத்தின் தலைவர் சிவன் கதலி, “குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் என அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு கொடுத்துள்ள விளம்பரம் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது” என குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக கேரள அரசுக்கும் மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) சபரிமலை தேவசம் போர்டு வெளியிட்டிருக்கும் விளம்பரத்தில் மலையாள பிராமணர்கள் மட்டும் பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை வாபஸ் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை வரவேற்றிருக்கும் அம்பேத்கர் கலாசார மன்றத் தலைவர் சிவன் கதலி, “நீண்ட நாட்களுக்கு பிறகு தேவசம் நிலை மாறியிருப்பது மறுமலர்ச்சிக்கு பலம் சேர்த்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்

பிரதமர் பதவியை குறிவைக்கிறாரா நிதிஷ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share