கேரளா உள்ளாட்சித் தேர்தல்: ஆளும் இடது முன்னணிக்கு பெரும் பின்னடைவு- காங்கிரஸ் விஸ்வரூபம்- சரித்திரம் படைத்த பாஜக- முழு விவரம்!

Published On:

| By Mathi

Kerala Local Body election Result

கேரளாவில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 11-ல் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று டிசம்பர் 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின

கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:

ADVERTISEMENT
  • எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.
  • ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
  • பாரதிய ஜனதா கட்சி (BJP) முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • 6 மாநகராட்சிகளில் கொச்சி, கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய 4 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது; கோழிக்கோடு மாநகராட்சியை இடதுசாரிகளின் LDF வென்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜகவின் NDA கைப்பற்றி, கேரள அரசியலில் சரித்திரம் படைத்துள்ளது.
  • மொத்தம் 941 கிராம பஞ்சாயத்துகளில் UDF 504 இடங்களிலும், LDF 341 இடங்களிலும், NDA 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
  • 152 வட்டார பஞ்சாயத்துகளில் UDF 79 இடங்களிலும், LDF 63 இடங்களிலும் வென்றுள்ளன.
  • 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF மற்றும் LDF தலா 7 இடங்களைக் கைப்பற்றின.
  • 87 நகராட்சிகளில் UDF 54 இடங்களிலும், LDF 28 இடங்களிலும், NDA 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
  • இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மூன்று பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • கட்சிகள் கைப்பற்றிய வார்டுகள்: காங்கிரஸ் – 7777; சிபிஎம் – 7402; முஸ்லிம் லீக் – 2826; பாஜக – 1910; சிபிஐ- 1012; கேரளா காங்கிரஸ்- 332; கேரளா காங்கிரஸ் (மணி) – 245; எஸ்டிபிஐ – 97.

2020 தேர்தலுடன் ஒப்பீடு

  • 2020ல் ஆளும் இடது கூட்டணி 941 கிராம பஞ்சாயத்துகளில் 514, 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், திருச்சூர் என 4 மாநகராட்சிகள் என பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளை LDF கைப்பற்றியது. ஆனால் தற்போதைய 2025 தேர்தலில் கிராம பஞ்சாயத்துகளில் 514ல் இருந்து 341 ஆகவும், மாவட்ட பஞ்சாயத்துகளில் 11ல் இருந்து 7 ஆகவும், மாநகராட்சிகளில் 4ல் இருந்து 1 ஆகவும் LDFன் வெற்றி குறைந்துவிட்டது.
  • காங்கிரஸின் UDF,கடந்த 2020 தேர்தலில் 321 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 மாநகராட்சிகளில் மட்டுமே வென்றது. இந்த முறை கிராம பஞ்சாயத்துகளில் 504 இடங்களையும், மாவட்ட பஞ்சாயத்துகளில் 7 இடங்களையும், 4 மாநகராட்சிகளையும் வென்று விஸ்வரூப வெற்றியைப் பெற்றுள்ளது.
  • 2020ல் எந்த மாநகராட்சியையும் வெல்லாத பாஜகவின் NDA இந்த முறை திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

ADVERTISEMENT
  • கேரளாவில் ஆளும் இடதுமுன்னணிக்கு எதிராக- முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவது உறுதியாகி உள்ளது.
  • 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூரில் வென்ற பாஜக இம்முறை மாநகராட்சி தேர்தலில் வெல்ல முடியவில்லை
  • கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது; இது காங்கிரஸின் சர்ச்சை எம்.பி.யான சசி தரூர் வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதி.
  • கேரளாவில் பாஜகவுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என தொடர்ந்து பேசப்பட்டாலும் தேர்தல் முடிவுகளானது கிறிஸ்தவர்கள்- முஸ்லிம்கள் எப்போதும் போல காங்கிரஸை முழுமையாக ஆதரித்துள்ளனர் என்பது உறுதியாகி இருக்கிறது.
  • சபரிமலையில் தங்க கட்டிகள் முறைகேடு பிரச்சனை வெடித்துள்ள நிலையிலும் கூட பந்தளம் நகராட்சியை பாஜகவால் தக்க வைக்க முடியவில்லை. பந்தளம் நகராட்சியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share