கேரளாவில் உள்ள 941 கிராம பஞ்சாயத்துகள், 152 பிளாக் பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகள் என மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 9 ,11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.
6 மாநகராட்சிகளில் 4-ல் UDF கூட்டணி முன்னிலையில் உள்ளது.
எர்ணாகுளம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 வார்டுகளில், UDF 44 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.. LDF 25 வார்டுகளிலும், பாஜக கூட்டணி 4 வார்டுகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
திருச்சூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 56 வார்டுகளில், UDF 34 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. LDF 11 வார்டுகளிலும், பாஜக கூட்டணி 8 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன.
கொல்லம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 56 வார்டுகளில், UDF 13 வார்டுகளிலும், LDF மற்றும் பாஜக கூட்டணி தலா 8 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான என்டிஏ முன்னிலை வகிக்கிறது. 101 இடங்களைக் கொண்ட மாநகராட்சியில் என்டிஏ 49 இடங்களிலும், LDF 28 இடங்களிலும், UDF 19 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
கிராம பஞ்சாயத்துகளை பொறுத்தவரை UDF 473 இடங்களிலும், LDF 366 இடங்களிலும், என்டிஏ 26 இடங்களிலும் மற்றவை 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
152 பிளாக் பஞ்சாயத்துகளில் UDF 81 இடங்களிலும், LDF 65 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF 8 இடங்களிலும், LDF 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
87 நகராட்சிகளில் UDF 55இடங்களிலும், LDF 28 இடங்களிலும், என்டிஏ 3 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
