ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டியில் குஜராத் அணியுடன் கேரள அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கேரள அணி முதல் இன்னிங்சில் 457 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து விளையாடிய குஜராத் அணி நேற்று (பிப்ரவரி 21) 5-வது நாள் ஆட்டத்தில் விளையாடியது. கடைசி விக்கெட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த குஜராத் வீரர் அஸ்ரன் நக்ஸ்வாலா பேட்டிங் முனையில் இருந்தார். பந்தை எதிர்கொண்ட அஸ்ரன் ஷார்ட் லெக்கில் மிக வேகமாக அடித்தார். kerala entered ranji trophy final
அப்போது, ஷார்ட்லெக்கில் பீல்டிங் நின்று கொண்டிருந்த கேரள வீரர் சல்மான் நிஷார் அணிந்திருந்த ஹெல்மெட் மீது பந்து பட்டு தெறித்து விக்கெட்டுக்கு பின் பக்கம் ஸ்லிப்பை நோக்கி சென்றது. அங்கு பீல்டிங்கில் இருந்த மற்றொரு கேரள வீரரான சச்சின் பேபி பந்தை பிடித்தார்.
உடனடியாக, கேரள வீரர்கள் அவுட் என்று கூறி கத்தினர். ஆனால், நடுவர் அவசரப்படவில்லை. முதலில் ஹெல்மெட் தலையில் அணிந்து அடி வாங்கிய பீல்டரான சல்மான் நிஷாரின் உடல்நிலையை கவனித்தார். கமெண்டரி கொடுத்தவர்களும் அமைதியாகவே இருந்தனர். பின்னர் , ஆராய்ந்து நடுவர் அவுட் கொடுத்தார். kerala entered ranji trophy final
இதனால், கேரள அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் முதல் இன்னிங்சில் முன்னணி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
பி.சி.சி.ஐ விதிகளின்படி பீல்டிங் நிற்பவர் அணிந்திருக்கும் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அவரின் உடல் பகுதியாகவே பார்க்கப்படும்.
பீல்டிங் நிற்பவர்கள் தங்கள் கையை கொண்டு ஜெர்சியை இழுத்து பிடித்து பந்தை பிடித்தால் மட்டுமே தவறு என்று கூறப்பட்டுள்ளது. இதனால், சல்மான் ஹெல்மெட் மீது பந்து பட்டு, சச்சின் பிடித்தது கேட்ச்சாக கருதப்பட்டது. அதனால் பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஐசிசி விதிகளின்படியும் விக்கெட் கீப்பர், பீல்டர்கள் அணிந்திருக்கும் ஹேல்மெட் மீது பந்து பட்டு ஸ்டம்ப்டு, ரன்அவுட் மற்றும் கேட்ச் ஆனாலோ அவுட்டாகவே கருதப்படும். kerala entered ranji trophy final
2 ரன்களில் கிடைத்த முன்னணி மூலம் கேரள அணி ரஞ்சி போட்டி இறுதிக்கு முதன்முறையாக முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விதர்பா அணியுடன் கேரளா மோதுகிறது. நாக்பூரில் வரும் 26 ஆம் தேதி இறுதிப் போட்டி தொடங்குகிறது.