ரூ.6,219 கோடி… அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா

Published On:

| By Kavi

அமெரிக்க நீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை தொடர்ந்து அதானி குழுமத்தின் ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது.

சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,110 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்பட 7 பேர் மீது அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அதானிக்கு பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 21) கென்ய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் வில்லியம் ரூட்டோ, “வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகிய கொள்கைகளுடன் எங்களின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டு நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு கென்யா அரசாங்கம் ஒப்புதல் அளிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

மின் பரிமாற்றம் (KETRACO) மற்றும் விமான நிலைய விரிவாக்கத்துக்கான (JKIA ) ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கானது. மொத்தம் 736 மில்லியன் டாலர் மதிப்பிலானது. இந்திய மதிப்பில் ரூ.6,219 கோடி ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

டிஜிட்டல் திண்ணை: அதானி லஞ்சம் கொடுத்தது யார் யாருக்கு?  அமெரிக்கா கையில் முழு பட்டியல்!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்… அதிர்ச்சித் தகவல்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share