இயக்குனராக களமிறங்கும் கருணாஸின் கென் கருணாஸ்

Published On:

| By Minnambalam Desk

வெற்றி மாறன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி, தேசிய விருதினை வென்ற ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். பாடகர் கருணாஸ் – கிரேசி கருணாஸ் மகன் .

தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை 2 படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த கென் கருணாஸ், கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடிப்பதோடு இயக்கவும் செய்கிறார் . தற்காலிகமாக இந்தப் படத்துக்கு காதலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.. (சிந்திக்கக் கூட நேரம் இன்றி பிசியாக சினிமா எடுக்கும் இயக்குனர்களின் படங்கள் வேண்டுமானால் ரிலீசுக்கு முதல் நாள் வரை தலைப்பு தேடி அலையலாம்.. முதல் படமே இப்படி ஏன் கென்?)

ADVERTISEMENT

படத்தில், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், நளினி ஆகியோருடன் டிஜிட்டல் திரை பிரபலங்களான சின்ன தமிழா- தாஜ்மோலா – கெட்டவன் மணிகண்டன்- கேரன் வின்சென்ட் – உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

”இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் பாரம்பரியமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் அறுபது நாட்கள் வரை நடைபெற்றது. மாணவ மாணவியர்களின் பள்ளிக்கூட வாழ்க்கையை திரையில் நேர்த்தியாக காட்சிப்படுத்துவதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தினமும் குறைந்த பட்சம் நூறு துணை நடிகர்கள் கலந்து கொண்டனர். முக்கிய காட்சிகளை படமாக்கும் போது 300 முதல் 450 துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும் படத்தின் முக்கிய பகுதியை படமாக்குவதற்காக படக் குழுவினர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவிற்கும் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டனர்.

ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான பாடல் காட்சிக்கு நடன இயக்குநர் ஷோபி மாஸ்டரின் நடன அசைவில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

ADVERTISEMENT

மூத்த நடிகை நளினி இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.

ஓ.. காதலர் தினத்துக்கா? அப்போ காதலர் என்றே வச்சிடலாமே?

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share