தொகுதி மறுசீரமைப்பு : உறுதி கொடுத்த கெஜ்ரிவால், பகவந்த் மான்

Published On:

| By Kavi

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை தமிழக குழு இன்று (மார்ச் 19) சந்தித்து பேசியது. Kejriwal, Bhagwant Mann give assurance

வருகிற மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் “நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை” தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இதில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுக்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார். 

இந்தநிலையில் இன்று (மார்ச் 19) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்களவை எம்.பி.கனிமொழி, மாநிலங்களவை எம்.பி.க்கள் கனிமொழி சோமு,  அப்துல்லா ஆகியோர் டெல்லியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறுகையில்,  “முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோரிடம் பேசினார்.  கண்டிப்பாக 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு வருவதாக கூறியிருக்கின்றனர். தொகுதி மறுவரையறை பிரச்சினைக்கு எதிரான தமிழகத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்” என்று கூறினார். 

கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் 22ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Kejriwal, Bhagwant Mann give assurance

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share