தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். பின்னர், படிப்பிற்காக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். படிப்பை முடித்தவர் மீண்டும் சினிமாவில் நுழைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேசுக்கு கொச்சியில் இருந்து துபாய் சென்று செட்டில் ஆகியுள்ள ஆண்டனி தாட்டில் என்பவருடன் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது. கோவாவில் டிசம்பர் 11 , 12 ஆம் தேதிகளில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். தங்கள் திருமணம் குறித்து விரைவில் கீர்த்தி சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொச்சியில் பள்ளியில் படிக்கும் போது, கீர்த்தி சுரேசுக்கு ஆண்டனி தாட்டில் பழக்கம் கிடைத்துள்ளது. பின்னர், அது காதலாக மாறியுள்ளது. 15 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆண்டனி தாட்டில் துபாயில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள படத் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் நடிகை மேனகா தம்பதியின் மகள் ஆவார்.
கீர்த்தி சுரேஷின் தந்தை கேரளத்தையும், தாய் தமிழகத்தையும் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேஷன் டிசைனிங் படித்துள்ள கீர்த்தி சுரேஷ், நன்றாக வயலினும் வாசிப்பார். பள்ளி படிப்பை சென்னையில் படித்தவர் கல்லூரி படிப்பை கேரளாவில் படித்தார். தனது தாயுடன் சேர்ந்து மலையாள படங்களையும் கீர்த்தி சுரேஷ் தயாரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணி என்றனர்… நயன்தாராவுடன் திருமணம் குறித்து விக்னேஷ் சிவன்
தலித் ஏழுமலை மருமகன் காமராஜ் கொலை வழக்கு: குற்றவாளி கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை!