கீர்த்தி சுரேஷின் ’ரகு தாத்தா’ ரிலீஸ் அப்டேட்!

Published On:

| By Monisha

keerthy suresh in raghu thatha

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு சாணி காகிதம், மிஸ் இந்தியா போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது, கீர்த்தி சுரேஷ் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸுக்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கே. ஜி. எப், காந்தரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரகு தாத்தா படத்தை தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது ரகு தாத்தா படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புரோமோவில் கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

சனிப்பெயர்ச்சி : திருநள்ளாறில் விடிய விடிய கோயில் நடை திறப்பு!

IPL2024: பிரீத்தி ஜிந்தாவுக்கே விபூதி அடித்த சென்னை கிங்ஸ்… ஏலத்தில் நடந்த தரமான சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share