கார்த்தி படத்தில் கீர்த்தி ஷெட்டி

Published On:

| By Kavi

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

கார்த்தி தற்போது இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் இவருக்கு அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் 26-வது படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

ADVERTISEMENT

நாலு பாட்டு, நாலு பைஃட் என்ற ஃபார்முலாவில், ஆக்‌ஷன் மசாலாவாக இந்தப் படம் உருவாகிறது. இப்படத்திற்கான பூஜை சென்னையில் கடந்த மார்ச் 27ஆம் தேதி எளிமையாக நடந்தது. படக்குழுவினர் மட்டும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கில் வெளியான ‘தி வாரியர்’ படத்தில் நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள ‘கஸ்டடி’ படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இராமானுஜம்

அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

“ஒன்றிணைவோம் – இது ஆரம்பம் தான்”: ராகுல் காந்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share