“ஹிந்தி தெரியாது போயா”: கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ டீசர் இதோ!

Published On:

| By Monisha

keerthi suresh in ragu thatha teaser

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். அதன் பிறகு சாணி காகிதம், மிஸ் இந்தியா போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெற்று தரவில்லை.

இந்நிலையில் தற்போது, கீர்த்தி சுரேஷ் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸுக்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் ரகு தாத்தா படத்தை இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கே. ஜி. எப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரகு தாத்தா படத்தை தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜனவரி 12) ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். “ஹிந்தி தெரியாது போயா..” என்ற வசனமும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. தற்போது ரகு தாத்தா டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

தற்காலிகமாய் தப்பித்த நெல்லை மேயர்!

தமிழ்நாடு வெள்ள நிவாரண விவகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share