கிச்சன் கீர்த்தனா: கீரை சாதம்!

Published On:

| By Monisha

Keerai Sadam Recipe in Tamil Kitchen Keerthana Spinach Rice

வெரைட்டி ரைஸ் என்று அழைக்கப்படும் கலந்த சாதம் இந்திய குடும்பங்களில் மிகவும் பொதுவானதாக அடிக்கடி தயாரிக்கப்படுகிறது. லஞ்சு பாக்ஸ் உணவாகவும், விருந்துகளிலும் இடம்பெறும் இதை, சத்தான உணவாக வீட்டிலேயே செய்து ருசிக்கலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும். கார்போஹைட்ரேட்டும் புரதமும் இரும்புச்சத்தும் சமச்சீரான அளவில் கிடைக்கும் உணவு இந்த கீரை சாதம்.

என்ன தேவை?

ADVERTISEMENT

அரிசி (பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி) ஒரு கப்
துவரம்பருப்பு – அரை கப்
முருங்கைக் கீரை அல்லது பொடியாக நறுக்கிய அரைக் கீரை – அரை கப்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
புளி – சிறு கோலிக்குண்டு அளவு

அரைக்க…

ADVERTISEMENT

தேங்காய்த் துருவல் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 6
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அரிசி, பருப்பு, கீரை, மஞ்சள்தூள், புளி கரைத்த விழுது, அரைத்த தேங்காய் விழுது எல்லாவற்றையும் குக்கரில் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி, அடுப்பில் வைக்கவும். மூன்று விசில் வந்தபிறகு இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். அப்பளம் தொட்டுச் சாப்பிடலாம்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: மக்ரோனி சூப்

சண்டே ஸ்பெஷல்: கிரீன் டீ பிரியரா நீங்கள்? அளவுக்கு அதிகமாகக் குடிப்பது ஆபத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share