அய்யோ… இன்னைக்கும் ஏறிடுச்சி : ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!

Published On:

| By christopher

gold rate drop rs 120 in tamil new year

கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலையை கேட்டாலே ஷாக் அடிக்கும் விதமாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. keep hike in gold price march 20

அந்தவகையில் சென்னையில் இன்று (மார்ச் 20) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.8,310-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.22 உயர்ந்து, ரூ.9,066-க்கும், ஒரு சவரன் ரூ.176 உயர்ந்து ரூ.72,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது ஒரு கிராம் 10 பைசா உயர்ந்து ரூ.114.10-க்கும், ஒரு கிலோ ரூ.100 உயர்ந்து ரூ.1,14,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 11ஆம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.64,104க்கு விற்ற நிலையில், கடந்த 10 நாட்களில் ரூ. 2,320 உயர்ந்து இன்று ரூ.66,480-க்கும் விற்பனையாகி வருவது நகைபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share