முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்வால் இமயமலையில் உள்ள கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கு செல்லும் வழியில் சார் தாம் யாத்திரையை ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள், பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று அதிகாலையில் கேதார்நாத்தில் பனிப்பொழிவு தொடங்கியது, அதே நேரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை பெய்ததால் கௌரிகுண்ட் மற்றும் சோன்பிரயாக் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். மேலும் பத்ரிநாத்தை சுற்றியுள்ள சிகரங்களிலும் பனி பெய்தது.
இதுகுறித்து பேசிய பட்கோட் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஷாலினி நேகி, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யமுனோத்ரி செல்லும் யாத்ரீகர்கள் ஜானகிச்சட்டியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டார்கள். வானிலை தெளிந்த பிறகு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.” என்று அவர் கூறினார்.
மோசமான வானிலை காரணமாக கடந்த திங்கட்கிழமை ஆலயத்திற்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்ட யாத்ரீகர்கள் நேற்று காலை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர், அவர்கள் ஏற்கனவே அங்கு பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பி விட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட் மயூர் தீட்சித் கூறுகையில், “கேதார்நாத் செல்லும் யாத்ரீகர்கள், சோன் பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் ஆகிய இடங்களில் வானிலை மோசமாக இருப்பதால் தற்காலிகமாக இந்த இடங்களுக்கு அதை கடந்து செல்வது பாதுகாப்பானது அல்ல. வானிலை சீரானதும் அவர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.” என்று கூறினார்.
கோவிட்-தூண்டப்பட்ட கட்டுப்பாடுகள் இனி நடைமுறையில் இல்லாத நிலையில், இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் இந்த ஆண்டு இமயமலைக் கோயில்களுக்கு வருகை தருகின்றனர்.
கடந்த மே 3ஆம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள இமயமலைக் கோயில்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
