தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்

Published On:

| By Selvam

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளும், ஐபிஎல் தொடரில், பெங்களூரு, டெல்லி, கொச்சி, சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்காகவும் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, 2020 ஆகஸ்ட் 15 அன்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அமிதாப் பச்சன் நடித்த ‘கபி கபி’ படத்தில் இருந்து ‘மெயின் பல் தோ பல்’ என்ற பாடலுடன், தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான நிகழ்வுகளை குறிக்கும் புகைப்படங்களை ஒரு காணொளியாக்கி, அதை இணையத்தில் பகிர்ந்து தனது ஓய்வை அறிவித்தார்.

ADVERTISEMENT

தற்போது, கேதர் ஜாதவும் அதே பாணியில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியான ‘ஆப் கி கசம்’ படத்தில் இருந்து ‘ஜிந்தகி கே சபர்’ என்ற பாடலுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான படங்களை ஒரு காணொளியாக்கி, அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, கேதர் ஜாதவ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், “எனது கிரிக்கெட் பயணத்தில் நீங்கள் அளித்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. 15:00 மணியில் இருந்து நான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக கருத்திக்கொள்ளுங்கள்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்திய அணிக்காக இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், 2 சதம், 6 அரைசதம், 42.09 சராசரியுடன் 1,389 ரன்களை சேர்த்துள்ளார். அதுமட்டுமின்றி 27 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல, 9 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 122 ரன்கள் சேர்த்துள்ளார்.

ADVERTISEMENT

அதேபோல, ஐபிஎல் தொடரில் 93 போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், 4 அரைசதங்களுடன் 1,196 ரன்களை சேர்த்துள்ளார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா? அப்டேட் குமாரு

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share