அசர்பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவின் குரோன்ஷி நகருக்கு சென்று கொண்டிருந்த விமானம் கஜகஸ்தான் நகரில் அக்டாவு பகுதி அருகே தீ பற்றி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், விமானம் ட்ரோக் அட்டாக் காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானம் சென்று கொண்டிருந்த குரோன்ஷி நகர் அமைந்துள்ள செக்னயா மாகாணத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலையும் நடத்தி வந்தது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.
ட்ரோன் அட்டாக் இல்லையென்றால் பறவை தாக்கியதில் விமானத்தில் ஓட்டை விழ வாய்ப்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்ய விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு இந்த விமானத்தின் பைலட், உக்ரைன் ட்ரோன் தாக்கி விட்டதாக பதற்றத்துடன் தகவல் கொடுத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அதோடு, அசர்பைஜான் விமானத்தில் இருந்த ஓட்டை ஒன்றை சுட்டிக் காட்டி ட்ரோன் அட்டாக்தான் காரணமென்று உறுதியாக சொல்கிறார்கள். விபத்துக்கான காரணம் குறித்து ரஷ்ய அதிகாரிகளோ, அசர்பைஜான் தரப்போ இது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் தப்பியுள்ளது.
விமானம் அதற்குரிய மார்க்கத்தில் இருந்து விலகி பயணித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. பின்னர், விபத்து நடப்பதற்கு சற்று முன்னதாக மட்டுமே ரேடாரில் தென்பட்டுள்ளது. விமானம் குரோன்ஷி நகரில் 3 முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. ஆனால், முடியாமல் போனதால் திருப்பி விடப்பட்டதாக தெரிகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி கிழக்கு உக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த மலேசிய விமானம் எம்.ஹெச் 17 ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
19 வயது பையன்பா… கோலி வேண்டுமென்றே மோதியதாக குற்றச்சாட்டு!