“தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்வது ஏன்?” என்று பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகளுமான கவிதா இன்று (மார்ச் 23) கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள கவிதா இல்லத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து கவிதாவை கைது செய்து டெல்லி அழைத்து சென்றனர்.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவிதாவுக்கு மார்ச் 23-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் வழங்கப்பட்டது. இன்றுடன் கஸ்டடி நிறைவடைய இருந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் கவிதா இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “இது சட்டவிரோதமான கைது. நீதிமன்றத்தில் எங்கள் சட்டப்போராட்டத்தை தொடர்வோம். அரசியலுக்காக என் மீது திட்டமிட்டு புனையப்பட்ட வழக்கு. அமலாக்கத்துறை புதிதாக எந்த கேள்விகளையும் கேட்கவில்லை. கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்வது ஏன்? . தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் கவிதாவின் மருமனுக்கு தொடர்பு இருப்பதால், இதுகுறித்து அவரிடம் விசாரிக்க 5 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து கவிதாவின் அமலாக்கத்துறை கஸ்டடியை மேலும் மூன்று நாட்களுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று பூஜ்ஜியம்… இன்று பாஜகவுடன் கூட்டணியா? – ராமதாஸை விமர்சித்த எடப்பாடி
IPL 2024: 454 நாட்களுக்கு பிறகு ‘கேப்டனாக’ களமிறங்கும் ரிஷப் பண்ட்…சறுக்குவாரா? சாதிப்பாரா?