பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் இலன். அந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அந்த படத்தை தயாரித்திருந்தார்.
பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹரிஷ் கல்யாண் – இலன் கூட்டணியில் ஸ்டார் என்ற புதிய படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டார் படத்தின் போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன் பிறகு ஏதோ சில காரணத்தினால் ஸ்டார் படத்தில் இருந்து ஹரிஷ் கல்யாண் விலகி கொண்டார். அதனை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக கமிட்டாகி நடிக்க தொடங்கினார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் படத்தை தயாரித்துள்ளது.
ஸ்டார் படத்தின் புரோமோ வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கடைசியாக கவின் நடிப்பில் வெளியான டாடா படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் ஸ்டார் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுபானங்களுக்கு அதிக வரி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்!
பியூட்டி டிப்ஸ்: அலுவலகத்தில் எப்போதும் ஃப்ரெஷ் லுக்கில் வலம் வர வேண்டுமா?