ஸ்டார் ஃபர்ஸ்ட் சிங்கிள்: காலேஜ் சூப்பர்ஸ்டாராக கலக்கும் கவின்

Published On:

| By Kavi

Kavin's Star Movie First Single

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் இளன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் – இளன் கூட்டணியில் ஸ்டார் என்ற புதிய படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஏதோ சில காரணத்தினால் ஸ்டார் படத்தில் இருந்து ஹரிஷ் கல்யாண் விலகி கொண்டதால், நடிகர் கவின் ஹீரோவாக கமிட்டாகி ஸ்டார் படத்தில் நடிக்க தொடங்கினார்.

ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் ஸ்டார் படத்தின் போஸ்டர்கள், புரோமோ வீடியோக்கள்  வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 12) சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்” வெளியாகி இருக்கிறது. “காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்”  பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

STAR - College Superstars Video | Kavin | Elan | Yuvan Shankar Raja | Lal, Aaditi Pohankar

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்… அண்ணாமலை கண்டனம்: அறநிலையத்துறை விளக்கம்!

ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!

”நான் ஏன் தலைமறைவாகனும்?” : நேரில் ஆஜரான ஆர்.கே.சுரேஷ் கேள்வி!

’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் பிறந்தநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share