ADVERTISEMENT

ரஸ்க்கா இல்லை ரிஸ்க்கா?- மாஸ்க் விமர்சனம்

Published On:

| By Minnambalam Desk

MASK

ஹேக்கிங் உள்ளிட்ட நாலாவித பரிமள புஷ்ப அயோக்கியத்தனங்கள் மூலம் பலரின் ரகசியங்களைத் திருடி, அவர்களை மிரட்டி பணமும்… அவர்களிடம் யாருக்கு என்ன காரியம் ஆக வேண்டுமோ, அவர்களுக்கும் அந்தக் காரியங்களை செய்து கொடுத்து அதன் மூலமும் பணமும் சம்பாதித்து வாழ்கிற ஒரு நபர் (கவின்)

ADVERTISEMENT

பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் ஆசைப்படும் ஜொள்ளு பார்ட்டி அவன் .

ADVERTISEMENT

திருமணம் ஆகி மனைவி கோபித்துக் கொண்டு அப்பா வீட்டில் இருக்கும் நிலையில் மாமனார் (சார்லி) அவன் மீது கோபம் இல்லாமல் இருக்கிறார்.

ஜெயில் கைதியாக இருந்து, அங்கே வந்த ஓர் அரசியல்வாதியை கொலை செய்ய ஆள் வைத்து, அப்போது அரசியல்வாதியை காப்பாற்றுவது போல நடித்து, அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவன் மூலமே வெளியில் வந்து …

ADVERTISEMENT

இளம்பெண்களை மயக்கி , காமத்துக்கு ஆசைப்படும் ஆட்களுக்கு அவர்களை அனுப்பி, அப்போது அவர்களை படம் பிடித்துக் கொண்டு வைத்துக் கொண்டு பெரிய பவர் புரோக்கராக மாறிய ஒருத்தி ( ஆண்ட்ரியா ஜெரிமியா) .

புதிதாகக் கடசி ஆரம்பித்து இருக்கும் மேற்படி அரசியல்வாதி தன்னிடம் உள்ள பெரும் பணத்தை, ஓ ட்டுப் போடக் கொடுக்கும் லஞ்சப் பணமாக மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க, அவளது உதவியை நாடுகிறான்

ADVERTISEMENT

தமிழகம் எங்கும் உள்ள தனது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்கு அவற்றை அனுப்பி மளிகை பொருட்களோடு பணத்தை வைத்து மக்களுக்கு கொடுக்கும் திட்டத்தை கொடுக்கிறாள் அவள்.

ஜொள்ளு பார்ட்டி நபர், அடுத்தவன் மனைவி ஒருவனோடு பழகி அவளோடு தங்குவதற்காக அவள் புருஷன் இல்லாத நிலையில் அவள் வீட்டுக்குப் போகிறான். அப்போது ஆணுறை வாங்குவதற்காக ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் நுழைகிறான். அந்த ஸ்டோருக்குள் பவர் புரோக்கர் பெண் ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்கு அனுப்பிய பணம் இருக்கிறது . அதைக் கொள்ளை அடிக்க, எம் ஆர் ராதா முகமூடி அணிந்த ஒரு குழு அங்கே இருக்கும் எல்லோரையும் துப்பாக்கி முனையில் மடக்கி வைத்துள்ளது. அதில் இவனும் சிக்குகிறான் .

பணத்தை அடித்துக் கொண்டு அவர்கள் போக, ஜொள்ளு பார்ட்டி அந்த அடுத்தவன் பொண்டாட்டி வீட்டுக்கு வர,அங்கே டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அடிக்கப்பட்ட பணம் இருக்க, சில அசம்பாவிதங்கள் நிகழ்கிறது .

பணத்தோடு தனது வீட்டுக்கு வருகிறான் ஜொள்ளு பார்ட்டி .

வீட்டில் ஜொள்ளு பார்ட்டி வைத்த பணத்தை அவனது அப்பா எடுத்து கடன்காரனிடம் கொடுக்க , பணத்தில் ஒரு பகுதி ஜொள்ளு பார்ட்டியிடம் இருப்பது பவர் புரோக்கர் பெண்மணிக்கு தெரிய வருகிறது.

அப்புறம் என்ன நடந்தது? பணத்தை கொள்ளையடித்தது யார் ஏன்? என்பதே தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் சார்பில் நடிகை ஆன் ட்ரியா ஜெரிமியா தயாரித்து வில்லியாக நடிக்க, சொக்கலிங்கம் உடன் தயாரிக்க, கவின், ருஹானி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் வழிகாட்டலில் விக்ரனன் அசோக் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் மாஸ்க்.

ஆண்டிரியா படம் தயாரிக்க முடிவு செய்தபோது இயக்குனர் வெற்றிமாறன் வழிகாட்டியாக இருந்து கதையை ஓகே செய்து கரெக்ட் செய்து கொடுத்து அதன் பிறகு ஆன்ட்ரியா எடுத்த படம் இது என்பதை இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்ட்ரியா ஜெரிமியா, அசத்தல் நடிப்பு. . ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை, ஜிவி பிரகாஷ்குமாரின் இசை சிறப்பு. நான்தான் கவின்.. என் படம் ஓட கவினாக இருப்பதே போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் கவின். கவின் சர்வசாதாரணமாக நினைத்து நடிக்கிறார்.

ஆரம்பத்தில் எம் ஆர் ராதா மாஸ்க் அவரது சில வசனங்கள் எல்லாம் வந்த போது, ஆகா என்னமோ சொல்லி அசத்தப் போகிறார்கள். அதுவும் வெற்றி மாறன் வேறு இருக்கிறார் என்று ஆவலாக எதிர்பார்த்தால் அஸ்கு புஸ்கு என்கிறது படக் குழு.

படத்தில் வரும் முக்கியக் கேரக்டர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் . கேவலமானவர்கள் .முக்கியக் கேரக்டர்கள் அனைத்திலும் ஆபாசம் அல்லது அசிங்கம் .

இதை எதற்கு வெற்றிமாறன் ஓகே செய்ய வேண்டும்? ஆன்ட்ரியா கடன் வாங்கி (என்று அவர் சொன்னது உண்மை எனில்) இந்தப் படத்தை எடுக்க வேண்டும்? இப்படி எல்லாம் படம் எடுத்ததால் அப்புறம் எப்படி தி ஷோ மஸ்ட் கோ ஆன் என்று சொல்லும் நிலையில் இருக்கும் ஆன்ட்ரியா ?

தவிர பெட்டி பெட்டியாய் மூட்டை மூட்டையாய் கட்டுக் கட்டாகப் பணம் என்ற பலமுறை அடித்துத் துவைத்த கதையை வைத்து இப்போது ஒரு கதையை எடுப்பது என்பது ஆபத்து.

சரி எடுத்ததுதான் எடுத்தார்கள் அதை சுவாரஸ்யமாக சொன்னார்களா? அதுவும் இல்லை.

கடைசியில் வரும் கொள்ளைக்கு காரணமான விஷயம் உண்மையில் நல்ல விஷயம். காமன் மேன்களை யாரும் ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள் என்பதை வைத்து படம் சொல்லும் மிக சிறப்பு. ஆனால் அதுவரை படம் ரொம்பபடுத்தி விட்டதால் அந்த நல்ல கிளைமாக்ஸ் பலன் தரவில்லை.

மாஸ்க் … டேமேஜ் பீஸ்

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share