சுற்றுலாவிற்கு சிறந்த நாடாக கருதப்படுகிற தாய்லாந்து நாட்டிற்கு இந்தியர்கள் அதிகளவில் படையெடுப்பது வழக்கம். kavingar thamarai angry on thailand tiger attack
அதிலும் குறிப்பாக அங்குள்ள புலிகள் காப்பகத்தில் அவற்றுக்கு பால் ஊட்டுவது, கறி கொடுப்பது, வாக்கிங் செல்வது போன்ற புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிடுவதை சிலர் பெருமையாக கருதுகின்றனர்.
அப்படி சமீபத்தில் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர், ஃபூகெட்டில் உள்ள பிரபல புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கிருந்த புலியுடன் வாக்கிங் சென்றார். தொடர்ந்து அதனுடன் செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில், புலி அவரை ஆக்ரோசமாக தாக்கியது. எனினும் லேசான வெளிக்காயங்களுடன் அவர் தப்பியதாக அங்கிருந்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பான 25 வினாடிகள் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புலிகள் காப்பகத்தில் உள்ள பாதுகாப்பு நெறிமுறை மற்றும் விலங்குகளின் நலன் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
மேலும் தாய்லாந்தில் சுற்றுலா என்றப் பெயரில் காட்டின் முக்கிய விலங்கான புலிகள் மோசமான முறையில் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
கம்பீரமாக காட்டில் வேட்டையாடி வாழும் அந்த விலங்களை, அதன் இயல்புக்கு மாறாக சாதுவான மற்றும் வலுவற்ற விலங்காக தாய்லாந்தில் வளர்க்கின்றனர். இது கொடூரமானது என குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பிரபல பாடலாசிரியர் தாமரை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

அதில் அவர், ”விலங்குகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். காட்டு விலங்குகள் உங்கள் செல்லப்பிராணிகள் அல்ல. செல்ஃபி மேனியா அருவருப்பானது. விலங்குகளை காட்டிலேயே விட்டுவிடுங்கள். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் முட்டாள்களே” என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவுக்கு பாடகி சின்மயி ’அக்ரி’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.